‘புரூஸ்லீ’யாக ஜி.வி.பிரகாஷ்!

‘புரூஸ்லீ’யாக ஜி.வி.பிரகாஷ்!

செய்திகள் 28-Jul-2015 1:04 PM IST VRC கருத்துக்கள்

‘பென்சில்’, நயன்தாரா இல்லனா த்ரிஷா’ ஆகிய படங்களில் நடித்து வரும் ஜி.வி.பிரகாஷ் குமார் அடுத்து நடிக்கும் படத்திற்கு ‘பாஷா என்கிற ஆன்டனி’ என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த டைட்டிலில் வரும் ‘பாட்ஷா’ என்ற வார்த்தை ரஜினிகாந்த் நடித்த பட டைட்டில் என்பதால் அதற்கு சிக்கல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இப்போது படத்திற்கு ‘புரூஸ்லீ’ என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள். ‘கெனன்யா ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை இயக்குனர் பாண்டிராஜின் உதவியாளர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்குகிறார். இப்படம் காமெடி த்ரில்லர் படமாக உருவாக இருக்கிறாதாம். இப்படத்தில் ஜி.வி.பிரகாஷின் கேரக்டர் பெயர் புரூஸ்லீயாம்! இதனால் அந்த கேரக்டர் பெயரை படத்திற்கு தலைப்பாக்கியிருக்கிறார்கள். கதாநாயகி நடிகை தேர்வு நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் துவங்கவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

குப்பத்து ராஜா - டீசர்


;