‘‘எம்.எஸ்.வி. இசை கடவுள்!’’ - ரஜினிகாந்த்

‘‘எம்.எஸ்.வி. இசை கடவுள்!’’ - ரஜினிகாந்த்

செய்திகள் 28-Jul-2015 12:04 PM IST VRC கருத்துக்கள்

‘மெல்லிசை மன்னர்’ எம்.எஸ்.விஸ்வநாதன் மறைவையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இசை அமைப்பாளர் இளையராஜா, ‘என்னுள்ளில் எம்.எஸ்.வி.’ என்ற பெயரில் ஒரு இசை நிகழ்ச்சியை நடத்தினார். சென்னை காமராஜர் அரங்கில் நேற்று நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் உட்பட பல திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் எம்.எஸ்.வி.யை நினைவு கூர்ந்து பேசும்போது,
‘‘எம்.எஸ்.விஸ்வநாதன் இசைக்கு சாமி! பெரிய மகான்! அவர் நினைவை கொண்டாடும் விதமாக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இளையராஜா அவர்கள் ஒரு இசைஞானி! எம்.எஸ்.வி. இசை சாமி! அந்த கடவுளை பற்றி ஒரு ஞானிக்கு தான் தெரியும். அவரைப் பற்றி பாமர மக்களுக்கு இசைஞானி தான் உணர்த்த வேண்டும். இந்த இசை நிகழ்ச்சியில் என்னைப் போன்றவர்கள் கலந்து கொண்டது எங்களுக்கு கிடைத்த பெரிய ஆசீர்வாதம்! திறமை என்பது கடவுள் கொடுப்பது. பெற்ற தாய், தந்தையிடம் இருந்து அது வருவதில்லை. ஜென்மம் ஜென்மமாக வரக்கூடியது. அது ஒரு பிராப்தம், சரஸ்வதி கடாட்சம்! எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு அது கிடைத்திருக்கிறது.

பணம், பெயர், புகழ் போன்றவை வரும்போது தலைகால் நிற்காது. ஆனால் எம்.எஸ்.வி.யிடம் சிறு கடுகளவு கூட தலைக்கனம் இருந்ததில்லை. அவர் ஒரு இசை கடவுள்! 1960 மற்றும் 70 காலகட்டத்தில் ஜாம்பவான்களாக நிறைய நடிகர்கள், இயக்குனர்கள், பாடகர்கள் இருந்தனர். எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், பாலச்சந்தர், ஸ்ரீதர், டி.எம்.சௌந்தர ராஜன், சீனிவாஸ், பி.சுசீலா என எல்லோரையும் புகழ் உச்சிக்கு கொண்டு சென்றவர் எம்.எஸ்.விஸ்வநாதன். ராமருக்கு உதவிய அனுமன் போல் இருந்தாலும் ஒரு அணில் மாதிரியே வாழ்ந்தவர் எம்.எஸ்.வி. அப்படிப்பட்ட ஒரு மகானை நான் பார்த்தது இல்லை. இனி பார்க்கப்போவதும் இல்லை. அதனால்தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன்’’ இவ்வாறு பேசினார் ரஜினிகாந்த் பேசினார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘‘அரசியலில் ரஜினியைவிட கமலுக்கே என் ஆதரவு!’’ - நடிகர் ஆர்.கே.சுரேஷ்


;