‘மாரி’க்கு இன்று பிறந்த நாள்!

‘மாரி’க்கு இன்று பிறந்த நாள்!

செய்திகள் 28-Jul-2015 10:27 AM IST VRC கருத்துக்கள்

2002-ல் ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் தனுஷ். கடந்த 13 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 35 படங்களில் நடித்துள்ளார் தனுஷ்! தமிழ் தவிர இரண்டு ஹிந்தி படங்கள், ஒரு மலையாள படம் (கெஸ்ட் ரோல்) என நடித்து தேசிய விருது உட்பட பல விருதுகள் பெற்றுள்ளார் தனுஷ்! இன்று இந்திய அளவில் அறியப்படும் ஒரு நடிகராக திகழ்ந்து வரும் தனுஷ் சிறந்த நடிகர் மட்டுமல்லாம்ல தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பல முகங்களுடன் சினிமாவில் பயணித்து வருகிறார். சமீபத்தில் இவரது தயாரிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் ‘காக்கா முட்டை’. இந்த படத்தின் வெற்றியுடன் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘மாரி’. ‘காக்கா முட்டை’, ‘மாரி’ என வரிசையாக வெற்றிப் படங்கள் தந்துகொண்டிருக்கும் தனுஷுக்கு இன்று பிறந்த நாள்! இன்று பிறந்த நாள் காணும் தனுஷுக்கு ‘டாப் 10 சினிமா’வும் தனது வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

VTV 2 ஆம் பாகத்தில் நான் தான் ஜெஸ்ஸி - மேகா ஆகாஷ்


;