அனுஹாசன் படத்திற்கு சிம்பு பாட்டு!

அனுஹாசன் படத்திற்கு சிம்பு பாட்டு!

செய்திகள் 27-Jul-2015 3:29 PM IST VRC கருத்துக்கள்

சுஹாசினி மணிரத்னம் இயக்கிய ‘இந்திரா’ படத்தில் நடித்த அனுஹாசன் நடிப்பில் சமீபத்தில் உருவாகியுள்ள படம் ‘வல்லதேசம்’. ஜோதிகா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து வெற்றிபெற்ற ‘36 வயதினிலே’ படத்தைப் போன்று இப்படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமாக உருவாகியுள்ளது. லண்டனை சேர்ந்த என்.டி.நந்தா ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கும் இப்படத்தின் 70 சதவிகித படப்பிடிப்பு லண்டனிலும், 30 சதவிகித படப்பிடிப்பு இந்தியாவிலும் நடைபெற்றுள்ளது. இந்தப் படத்தில் அனுஹாசனுடன் நாசர், டேவிட், பாலாசிங், ‘ஆடுகளம்’ ஜெயபாலன், மாய தவசி என பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு எல்.வி.முத்துகுமாரசாமி இசை அமைத்துள்ளார். இவர் சிம்புவின் உறவு வழி சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் சிம்பு இப்படத்திற்காக ஒரு பாடலை பாடவும் செய்துள்ளார். இப்படத்தின் ஆடியோவை ஆகஸ்ட் 1-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்த விழாவில் கம்லஹாசன், பாரதிராஜா உட்பட பல திரையுலக பிரபலங்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். ‘ Lakxshanna Pictures’ நிறுவனம் சார்பில் இப்படத்தை கே.ரவீந்திரன், இமானுவேல் இணைந்து தயாரித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வல்லதேசம் - அதிகாரபூர்வ டிரைலர்


;