‘ஏவிஎம்’முக்கு தலைவணங்கிய ‘ஜெயம்’ ரவி!

‘ஏவிஎம்’முக்கு தலைவணங்கிய ‘ஜெயம்’ ரவி!

செய்திகள் 27-Jul-2015 10:29 AM IST VRC கருத்துக்கள்

’லட்சுமி மூவி மேக்கர்ஸ்’ நிறுவனம் தயாரித்து சுராஜ் இயக்கியுள்ள ‘சகலகலாவல்லவன்’ (அப்பா டக்கர்) படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. முதலில் ‘அப்பாடக்கர்’ என்று பெயர் வைக்கப்பட்டிருந்த இப்படத்திற்கு இப்போது ‘சகலகலாவல்லவன்’ என்று பெயர் மாற்றி வைத்திருக்கிறார்கள். இது குறித்து ‘ஜெயம்’ ரவி பேசும்போது,

‘‘அப்பா டக்கர்’ என்ற டைட்டிலுக்கு சிக்கல் வந்தபோது இயக்குனர் சுராஜும், தயாரிப்பாளர்களும் பல டைட்டில்களை பரிசீலனை செய்தனர். ‘அப்பா டக்கர்’ என்றால் ‘எல்லாம் தெரிந்தவன்’ என்று அர்த்தமாம்! இப்படத்தின் கதாநாயகனுக்கு இந்த வார்த்தை மிகப் பொருந்தும் என்பதால் ‘சகலகலாவல்லவன்’ என்று டைட்டில் வைக்க முடிவு செய்தோம். ஆனால் இதே பெயரில் ஏற்கெனவே ஏவிஎம்.நிறுவனம் தயாரித்து, கமல்ஹாசன் நடித்த ஒரு படம் படம் வெளிவந்துள்ளதால், இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான முரளிதரன் சார், ஏவி.எம்.சரவணன் அவர்கள் மற்றும் பாலசுப்ரமணியம் அவர்களிடம் பேசி இந்த தலைப்பை வைக்க அனுமதி பெற்றார்கள். ஏற்கெனவே வேறு சில ஹீரோக்கள் நடித்த படங்க்ளுக்கு கூட இந்த தலைப்பை வைக்க அனுமதி கேட்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு அனுமதி கொடுக்காத ஏவிஎம் நிறுனவத்தினர் இப்போது முரளிதரன் சார் மீதுள்ள அன்பின் காரணமாக அனுமதி கொடுத்துள்ளார்கள். நான் நடித்த இப்படத்திற்கு ‘சகலகலாவல்லவன்’ என்று தலைப்பு வைக்க அனுமதி கொடுத்த ‘ஏவிஎம்’முக்கு தலை வணங்குகிறேன்’’ என்றார் ‘ஜெயம்’ ரவி!

மேலும் ‘ஜெயம்’ ரவி பேசும்போது, ‘‘நான் இதுவரை ஒரு முழு காமெடி படத்தில் நடித்ததில்லை. இப்படம் முழுக்க முழுக்க காமெடி படமாக அமைந்துள்ளது. காமெடி படம் என்றாலும் இதில் நல்ல ஒரு கருத்தையும் கூறியுள்ளார் இயக்குனர் சுராஜ். அதாவது, தற்போது திருமணமான சில நாட்களிலேயே விவாகரத்தும் நடந்து விடுகிறது. விவாகரத்தின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிறது. கூட்டுக் குடும்படங்களையே பார்க்க முடிவதில்லை! கணவன், மனைவி சேர்ந்து வாழ்வது தான் கூட்டுக்குடும்பம என்று சொல்லும் அளவிற்கு இப்போது நிலமை மோசமாகி இருக்கிறது. இது குறித்த நல்ல ஒரு கருத்தை இப்படத்தில் பதிவு செய்திருக்கிறோம். அனைவரும் பார்த்து ரசிக்கக் கூடிய ஒரு படமாக ‘சகலகலாவல்லவன்’ அமைந்துள்ளது. அனைவரும் இப்படத்தை தியேட்டருக்கு வந்து பாருங்கள்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

டிக் டிக் டிக் - டிரைலர்


;