‘என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்’ விஷால், ‘முயல்குட்டி’ காஜல்!

‘என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்’ விஷால், ‘முயல்குட்டி’ காஜல்!

செய்திகள் 27-Jul-2015 10:19 AM IST Chandru கருத்துக்கள்

‘பாண்டியநாடு’ படத்திற்குப் பிறகு ‘பாயும்புலி’யில் மீண்டும் இணைந்திருக்கிறார்கள் நடிகர் விஷாலும், இயக்குனர் சுசீந்திரனும். வழக்கம்போல் எல்லா விஷயங்களையும் முன்கூட்டியே திட்டமிட்டு வேலைகளை பரபரப்பாக முடித்து வருகிறார்கள். படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துரிதமாக போய்க் கொண்டிருக்கின்றன. சமீபத்தில் இப்படத்தின் சிங்கிள் டிராக் வெளியானதைத் தொடர்ந்து, டி.இமான் இசையமைப்பில் உருவாகியிருக்கும் ‘பாயும் புலி’ ஆல்பம் ஆகஸ்ட் 2ல் வெளியாகவிருக்கிறது.

இப்படத்தில் முதல்முறையாக விஷாலுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார் காஜல் அகர்வால். ‘வெடி’ படத்திற்குப் பிறகு இப்படத்திலும் போலீஸாக நடிக்கிறார் விஷால். அதுவும் ‘என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்’டாம். விஷால் போலீஸ் அதிகாரி என்பது படத்தின் இடைவேளைக்குப் பிறகே தெரிய வரும் என சஸ்பென்ஸை முன்கூட்டியே உடைத்திருக்கிறார் சுசீந்திரன். காஜல் அகர்வாலை காதலிக்கும் விஷால் அவரை செல்லமாக ‘முயல்குட்டி’ என்று அழைப்பாராம். கூடவே ‘முயல்குட்டி’ வார்த்தையை பாடல் ஒன்றிலும் பயன்படுத்தியிருக்கிறார்களாம். இப்படத்தில் காமெடியன் சூரி கான்ஸ்டபிளாக நடித்திருக்கிறார்.

‘பாயும் புலி’ வரும் செப்டம்பர் 3ஆம் தேதி திரையரங்குகளில் பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கீ - டீசர்


;