ஐஸ்வர்யா தனுஷின் புதிய முயற்சி!

ஐஸ்வர்யா தனுஷின் புதிய முயற்சி!

செய்திகள் 25-Jul-2015 11:51 AM IST VRC கருத்துக்கள்

‘3’ மற்றும் ‘வை ராஜா வை’ ஆகிய படங்களை இயக்கிய ஐஸ்வர்யா தனுஷ் யூ டியூப் சேனல் ஒன்றை துவங்கி குறும் படங்களை வெளியிட உள்ளார் ‘டென் என்டர்டெயின்மென்ட்’ என்ற பெயரில் துவங்கியுள்ள இந்த சேனலில் இளம் தலைமுறையினரை ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களது குறும் படங்களை வெளியிட உள்ளார். தென்னிந்தியாவில் இத்தகைய முயற்சி இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. இந்த சேனல் வழியாக தற்பொழுது தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட குறும்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வெளியிட இருக்கிறார். இது பற்றி ஐஸ்வர்யா தனுஷ் கூறும்போது,

“பல திறமை சாலிகளுக்கு தங்கள் திறமைக்கான அங்கீகாரம் கிடைக்காமல் போகிறது. மேலும் அவர்களது திறமை யாருக்கும் தெரியாமலும் போகிறது. டென் என்டர்டெயின்மென்ட்’ அப்படிபட்ட திறமைசாலிகளுக்கான ஒரு மேடையாக இருக்கும். முதலில் தென்னிந்திய மொழிகளில் குறும் படங்களை வெளியிட்டு பின்னர் மற்ற மொழி குறும்படங்களையும் வெளியிட திட்டமிட்டுள்ளோம். மேலும் ‘டென் என்டர்டெயின்மென்ட்’ என்பது ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸி’ன் ஒரு அங்கமாகும். மற்றும் டிவோ, அவர்களது டிஜிட்டல் பங்குதாரர், சமூக ஊடக தளங்களை கவனித்து கொள்ள பொறுப்பேற்றுள்ளனர்.

குறும் பட இயக்குனர்கள் தங்களது படைப்புகளை – submit@tenentertainment.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பலாம்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் மோஷன் போஸ்டர்


;