சாதனை மேல் சாதனை படைக்கும் பாகுபலி!

சாதனை மேல் சாதனை படைக்கும் பாகுபலி!

செய்திகள் 25-Jul-2015 11:21 AM IST VRC கருத்துக்கள்

இந்திய சினிமாவில் கடந்த சில நாட்களாக இருந்து வரும் ‘ஹாட் டாபிக்’ பாகுபலி படமும், அதன் பிரம்மாண்ட வசூலும் தான்! இப்படம் வெளியான 3 நாட்களிலேயே 150 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. கடந்த 10-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியான இப்படம் கடந்த 15 நாட்களில் 400 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து மேலும் சாதனை படைத்துள்ளது. இப்படம் வெளியாகி 15 நாட்களான நிலையிலும் இப்படம் வெளியான பாதிக்கும் மேல் தியேட்டர்களில் இன்னமும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. ‘பாகுபலி’யின் இந்த பிரம்மாண்ட வெற்றி தென்னிந்திய சினிமா உலகினரை மட்டுமல்லாமல் மொத்த இந்திய சினிமா உலகினரையே பேசவும், வியக்கவும் வைத்துள்ளது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நான் ஆணையிட்டால் - டிரைலர்


;