‘பேய்’ ஆக நடிக்கிறார் லட்சுமி மேனன்!

‘பேய்’ ஆக நடிக்கிறார் லட்சுமி மேனன்!

செய்திகள் 25-Jul-2015 10:56 AM IST VRC கருத்துக்கள்

சிபிராஜ் நடிப்பில் ‘நாணயம்’, ’நாய்கள் ஜாக்கிரதை’ ஆகிய படங்களை இயக்கிய சக்தி ராஜன் தற்போது இயக்கி வரும் படத்தில் ‘ஜெயம்’ ரவி கதாநாயகனாக நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் ‘ஜெயம்’ ரவிக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். தற்போது ‘வீரம்’ சிவா இயக்கத்தில் அஜித்துக்கு தங்கச்சியாக நடித்து வரும் லட்சுமி மேனன், சக்தி ராஜன் இயக்கும் பத்தில் மாறுபட்ட ஒரு கேரக்டரில் நடிக்கிறார். இப்படத்தின் ஒரு சில காட்சிகளில் அவர் ‘பேய்’ ஆகவும் வருவாராம்! இந்த படத்தில் ‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜித்தின் மகளாக நடித்த அனைகாவும் நடிக்கிறார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்றுள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் ஆகிய இடங்களில் நடைபெறவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

டிக் டிக் டிக் - டீசர்


;