‘ருத்ரம்மா தேவி ’ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘ருத்ரம்மா தேவி ’ரிலீஸ் தேதி அறிவிப்பு!

செய்திகள் 24-Jul-2015 1:22 PM IST VRC கருத்துக்கள்

பிரம்மாண்டமான முறையில் உருவாகியிருக்கும் மற்றொரு படம் ‘ருத்ரம்மா தேவி’. அல்லு அர்ஜுன், ராணா, அனுஷ்கா, நித்யா மேனன், கிருஷ்ணம் ராஜு என பல பிரபலங்கள் நடித்திருக்கும் இப்படத்தினை குணசேகர் இயக்கியிருக்கிறார். குணசேகருடன் இசைக்கு இளையராஜா, ஒளிப்பதிவுக்கு அஜயனன் வின்சென்ட், படத்தொகுப்புக்கு ஸ்ரீகர் பிரசாத் என பெரும் கலைஞர்களின் கூட்டணியில் உருவாகியுள்ள இப்படம் தமிழ் தெலுங்கு மொழிகளில் வெளியாகவிருக்கிறது. இந்த படத்தினை தமிழகத்தில் ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வரும் ‘ருத்ரம்மா தேவி’ படத்தை செப்டம்பர் மாதம் 4-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியிட இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள்! ராணா, அனுஷ்கா முதலானோர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி சாதனை படைத்துள்ள படம் ‘பாகுபலி’. இப்படத்தை போன்று அனுஷ்கா, ராணா முதலானோருக்கு ‘ருத்ரம்மா தேவி’ சிறப்பு சேர்க்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாச்சியார் - டைட்டில் மோஷன் போஸ்டர்


;