படத்தலைப்பானது அஜித் படப்பாடல் வரி!

படத்தலைப்பானது அஜித் படப்பாடல் வரி!

செய்திகள் 23-Jul-2015 5:52 PM IST VRC கருத்துக்கள்

அஜித் நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற 'என்னை அறிந்தால்' படத்தில் இடம் பெற்று பிரபலமான 'உனக்கென்ன வேணும் சொல்லு' பாடலின் முதல் வரியை இப்போது ஒரு படத்திற்கு தலைப்பாக்கியிருக்கிறார்கள். ‘டெய்சி’ என்று முதலில் தலைப்பிடப்பட்ட படத்துக்கு கதையின் தன்மைக்கு ஏற்றவாறு இப்போது 'உனக்கென்ன வேணும் சொல்லு டெய்சி ' என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள்.

‘‘இந்த கதை அமானுஷ்ய சக்தியைப் பற்றிய கதையாக இருந்தாலும் , மூல கருத்து ஒரு தந்தைக்கும், மகளுக்கும் இடையே நடக்கும் கதைதான். எந்த உறவிலும் உறுதி மொழி முக்கியமானது. மற்ற உறவுகளை விட தந்தை மகளுக்குள் இருக்கும் உறவும், அதன் வாயிலாக கொடுக்கப்படும் உறுதி மொழியும் காலத்தை தாண்டி நீடிக்கும் என்பர். அப்பேற்பட்ட ஒரு தந்தை, கருவில் இருக்கும் தன் சிசுவிடம் கொடுக்கும் உறுதி மொழி , அதைக் காப்பாற்ற முடியாமல் அவர் திசை மாறும் சூழ்நிலை, காப்பாற்றப்படாத உறுதி மொழியின் காரணமாக உயிர் இழக்கும் அந்தக் குழந்தை பின்னர் ஆவியாகி தன்னுடைய நிலைமைக்கு பழி வாங்கும் சூழ்நிலை என்று தட தடக்கும் திரை கதை மூலம் ரசிகர்களை கவரும் படமாக இருக்கும் 'உனக்கென்ன வேணும் சொல்லு டெய்சி' என்கிறார்’’ இப்படத்தை இயக்கியிருக்கும் ஸ்ரீநாத் ராமலிங்கம். இந்த படத்தில் தீபக் பரமேஷ், ஜாக்லீன் பிரகாஷ், குணாலன் மோகன், மோர்ணா, அனிதா ரெட்டி, 'மைம்' கோபி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை அடுத்த மாதம் Auraa Cinemas நிறுவனம் உலகமெங்கும் திரையிடவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

குற்றம் 23 - மோஷன் போஸ்டர்


;