அரசியலில் ஜெய், ‘புகழ்’ பெறுவாரா?

அரசியலில் ஜெய், ‘புகழ்’ பெறுவாரா?

செய்திகள் 23-Jul-2015 3:05 PM IST VRC கருத்துக்கள்

இயக்குனர் மணிமாறன் இயக்கியுள்ள படம் ‘புகழ். இப்படத்தின் முக்கிய கேரக்டர்களில் ஜெய், சுரபி நடித்துள்ளனர். ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் இப்படத்தில் ஜெய் தனது ரொமான்டிக் ஹீரோ இமேஜிலிருந்து வேறுபட்டு வலிமைமிக்க ஒரு அரசியல் பின்புலம் கொண்ட ஆக்‌ஷன் ஹீரோவாக நடித்திருக்கிறார். சமீபகாலமாக கார் ரேஸில் ஈடுபட்டு தனது இமேஜை உயர்த்திக்கொண்டுள்ள ஜெய்க்கு இப்படத்தின் அரசியல் பின்புலம் கொண்ட ஹீரோ கதாபாத்திரம் மேலும் புகழை தேடித்தரும் விதமாக அமைந்துள்ளதாம். ‘ஃபிலிம் டிபார்ட்மென்ட்’ சுஷாந்த் பிரசாத் தயாரிப்பில் வருண் மணியனின் ரேடியன்ஸ் மீடியா விரைவில் வெளியிடவிருக்கும் ‘புகழ்’ திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியானது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பலூன் - டீசர்


;