ஜெயராம் மகனுக்கு ஜோடியாகும் மாடல் அழகி!

ஜெயராம் மகனுக்கு ஜோடியாகும் மாடல் அழகி!

செய்திகள் 23-Jul-2015 12:56 PM IST VRC கருத்துக்கள்

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தை இயக்கிய பாலாஜி தரணீதரன் தற்போது இயக்கி வரும் படம் ‘ஒரு பக்க கதை’. இப்படத்தில் நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ் ஹீரோவாக நடிக்கிறார். ஒரு சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள காளிதாஸ் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் இது. இந்த படத்தில் காளிதாஸுக்கு ஜோடியாக கேரளாவை சேர்ந்த மேகா என்ற மாடல் அழகி நடிக்கிறார். விஷுவல் கம்யூனிகேஷன் படித்துள்ள மேகா, சென்னை சில்க்ஸ், ஜி.ஆர்.டி., ஜாய் ஆலுக்காஸ் உட்பட பல விளம்பரங்களில் நடித்துள்ளார். பரதநாட்டியம், கர்நாடக சங்கீதம் ஆகியவற்றிலும் பயிற்சி பெற்றுள்ள மேகா, ‘ஒரு பக்க கதை’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் மோஷன் போஸ்டர்


;