அஜித் படத்தில் ஸ்ருதிஹாசன் வக்கீலா?

அஜித் படத்தில் ஸ்ருதிஹாசன் வக்கீலா?

செய்திகள் 23-Jul-2015 12:41 PM IST Chandru கருத்துக்கள்

‘வீரம்’ சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘தல 56’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கின்றன. சென்னை, இத்தாலியைத் தொடர்ந்து தற்போது படப்பிடிப்பிற்காக கொல்காத்தாவில் முகாமிட்டிருக்கிறது ‘தல 56’ படக்குழு. இரண்டு நாட்களுக்கு முன்பு கொல்கத்தா சென்று அஜித், ஸ்ருதிஹாசன் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கிக் கொண்டிருக்கிறராம் சிவா.

இப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் டாக்ஸி டிரைவராக நடிக்கிறார் என ஏற்கெனவே வதந்திகள் வந்து கொண்டிருந்தன. ஆனால், தற்போது வெளியாகியிருக்கும் புகைப்படம் ஒன்றால், இப்படத்தில் ஸ்ருதிஹாசன் வக்கீலாக நடிக்கிறாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (ஜூலை 22) காலை கொல்கத்தாவிலுள்ள விக்டோரியா மெமோரியல் ஹால் முன்பு இப்படத்திற்கான படப்பிடிப்பு நடந்தது. அப்போது வக்கீல் உடையுடன் ஸ்ருதிஹாசன் ஓடிவருவது போன்ற காட்சி படமாக்கப்பட்டதாம். இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனைத் தொடர்ந்துதான் ஸ்ருதிஹாசன் வக்கீலாக நடிக்கிறார் என செய்திகள் வெளியாகி வருகின்றன.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விவேகம் - டிரைலர்


;