ஒரே நாளில் இணையும் 3 திலகங்கள்!

ஒரே நாளில் இணையும் 3 திலகங்கள்!

செய்திகள் 23-Jul-2015 12:07 PM IST VRC கருத்துக்கள்

‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன் நடித்து மாபெரும் வெற்றிப் பெற்ற படம் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’. பெரும் சாதனை படைத்த இந்த பிரம்மாண்ட படத்தை இன்றைய தலைமுறையினரும் கண்டுகளிக்க வேண்டும் என்று புதிய தொழில்நுபட்த்தில் உருவாக்கி, இம்மாதம் 31 ஆம் தேதி வெளியிட இருக்கிறார்கள். இதே தினம் நடிகர் திலகத்தின் மகன் ‘இளைய திலகம்’ பிரபு நடித்துள்ள ‘சகலகலா வல்லவன் அப்பா டக்கர்’ படம் மற்றும் சிவாஜி கணேசனின் பேரனும், பிரபுவின் புதல்வருமான விக்ரம் பிரபு நடித்துள்ள ‘இது என்ன மாயம்’ ஆகிய படங்களும் ரிலீசாகவிருக்கிறது. ‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன் மற்றும் ‘இளைய திலகம்’ பிரபு, ‘வீரதிலகம்’ விக்ரம் பிரபு என மூன்று திலகங்கள் நடித்த படங்கள் ஒரே நாளில் வெளியாக இருப்பதால் அவர்களின் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சிக்கு ஆளாகியிருக்கிறார்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கூட்டத்தில் ஒருத்தன் - ஏன்டா இப்படி பாடல் வீடியோ


;