'ஆஹா ஓஹோ' சொல்ல வைக்குமா ஆரண்யம்?

'ஆஹா ஓஹோ' சொல்ல வைக்குமா ஆரண்யம்?

செய்திகள் 23-Jul-2015 11:07 AM IST VRC கருத்துக்கள்

" நான் யாரிடமும் உதவியாளராக பணிபுரியவில்லை. படங்கள் பார்த்தும் பல விதமான சினிமா நண்பர்கள் மூலம் பழகிய அனுபவங்கள் பெற்றும் சினிமா கற்றவன். இப்படம் காடு சார்ந்த காதல் கதை. புதிய தளம். நிச்சயம் இப்படம் புதிய அனுபவமாக இருக்கும். நண்பர்களாக இணைந்து இப்படத்தை உருவாக்கியிருக்கிறோம். 'காதலிக்க நேரமில்லை' படத்தில் நாகேஷ் சொல்லும் ‘ஆஹா ஓஹோ ’ என்ற வார்த்தையை எங்கள் கம்பெனிக்கு பெயராக வைத்துள்ளோம். இப்படம் காதல் கதை என்றாலும் இப்படம் உருவான விதம் எங்கள் நட்பின் பின்னணியில் நடந்த கதையாக இருக்கும். கேரளாவிலுள்ள சாலக்குடி காடு முதல் தாய்லாந்து காடுவரை போய் 60 நாட்களில் படத்தை முடித்துள்ளோம். புதியதை என்றும் வரவேற்கும் ரசிகர்கள் இப்படத்தையும் வரவேற்பார்கள் என்று நம்புகிறேன்'' என்றார்.

இந்த படத்திற்கு ‘அன்னக்கொடி' புகழ் சாலை சகாதேவன் ஒளிப்படிவு செய்துள்ளார். அறிமுக இசை அமைப்பாளர் எஸ்.ஆர்.ராம் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் டிரையிலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. டிரைலரை பாடலாசிரியர் பா.விஜய், நடிகர் ஸ்ரீ இணைந்து வெளியிட்டனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - டீசர்


;