கின்னஸ் சாதனை படைத்த பாகுபலி!

கின்னஸ் சாதனை படைத்த பாகுபலி!

செய்திகள் 23-Jul-2015 10:45 AM IST VRC கருத்துக்கள்

இந்தியாவிலேயே அதிக செலவில் தயாரான படம், தென்னிந்திய அளவில் அதிக வசூல் குவித்துள்ள படம் என பல சாதனைகளுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘பாகுபலி’ மற்றுமொரு சாதனை படைத்துள்ளது! ‘பாகுபலி’ தற்போது கின்னஸ்ஸிலும் இடம் பிடித்துள்ளது. உலகிலேயே மிகப் பெரிய போஸ்டர் ‘பாகுபலி’க்காக உருவாக்கப்பட்டது என்ற கின்னஸ் சாதனை ‘பாகுபலி’ படத்திற்கு கிடைத்துள்ளது. கடந்த மாதம் 27-ஆம் தேதி கேரளாவில் நடைபெற்ற ‘பாகுபலி’ பட புரொமோஷன் நிகழ்ச்சியை ஒட்டி கொச்சியிலுள்ள ஸ்கேர்ட் ஹார்ட் கல்லூரி வளாகத்தில் 4,793.65 சதுர அடி அளவில் பிரம்மாண்ட போஸ்டர் உருவாக்கப்பட்டது. இப்போது அந்த போஸ்டர் உலகிலேயே மிகப் பெரிய போஸ்டர் என்று கின்னஸ்ஸில் இடம் பிடித்து ‘பாகுபலி’க்கு மேலும் சிறப்பு சேர்த்துள்ளது. இதனைஅ கின்னஸ் நிர்வாகமே அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எனக்கு பட்டங்கள் பிடிக்காது - ரகுல் ப்ரீத்


;