‘இளைய மார்கண்டேயனு’க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

‘இளைய மார்கண்டேயனு’க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

செய்திகள் 23-Jul-2015 9:54 AM IST Chandru கருத்துக்கள்

‘இளைய மார்கண்டேயன்’ சூர்யாவுக்கு இன்று பிறந்தநாள். 1975ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி பிறந்த சரவணன், 1997ஆம் ஆண்டு சூர்யாவாக தமிழ்த் திரையுலகில் நுழைந்தார். இதோ... இப்போது அகவையில் 40-ஐயும், திரை அனுபவத்தில் 18 வருடங்களையும் நெருங்கிவிட்டார் சூர்யா. ஆனால் இப்போதும் அதே எளிமை, தன்னடக்கம், ஒழுக்கம் என தன் தந்தையை அச்சு அசலாக பிரதிபலிக்கிறார் சூர்யா. அதுதான் அவரது பலம். அதுவே லட்சக்கணக்கான ரசிகர்களை சூர்யாவை நோக்கி இழுக்கக் காரணம்.

சிவகுமார் கல்வி அறக்கட்டளை, அகரம் ஃபவுன்டேஷன் மூலமாக எண்ணற்ற நலத்திட்டப் பணிகளை செய்துவரும் தங்கள் நாயகனைப் போலவே அவரது ரசிகர்களும் அவரின் பிறந்தநாளை நலத்திட்டப் பணிகளோடுதான் ஒவ்வொரு வருடமும் கொண்டாடுகிறார்கள். அந்தவகையில் இந்த பிறந்தநாளிலும், அரசு பொது மருத்துவமனையில் ரத்ததான முகாம், பார்வையிழந்தவர்களுக்கு சிற்றுண்டி, இன்று பிறக்கும் 10 ஏழை குழந்தைகளுக்கு தங்க மோதிரம், மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள் என தங்களது கொண்டாட்டங்களை நலத்திட்டங்களாக மாற்றத் திட்டமிட்டுள்ளனராம் சூர்யாவின் ரசிர்கள்.

‘நற்பணி நாயகனு’க்கு நாமும் உரக்கச் சொல்லலாம் பிறந்தநாள் வாழ்த்துக்களை...

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மேயாத மான் - தங்கச்சி பாடல் வீடியோ


;