ரஜினியின் உதவியாளர் தயாரித்திருக்கும் படம்!

ரஜினியின் உதவியாளர் தயாரித்திருக்கும் படம்!

செய்திகள் 22-Jul-2015 2:00 PM IST VRC கருத்துக்கள்

‘ஜே.பி.ஆர்.ஃபிலிம்ஸ்’ என்ற பட நிறுவனம் சார்பில் எஸ்.ராஜேந்திரன், எம்.‘ரஜினி’ ஜெயராமன், எல்.பிருத்திவிராஜ், கே.ஜெயராமன் ஆகிய நான்கு பேர் இணைந்து தயாரித்துள்ள படம் ‘கிருமி’. தயாரிப்பாளர்களில் ஒருவரான ‘ரஜினி’ ஜெயராமன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் பல ஆண்டு காலம் உதவியாளராக இருந்தவர். இந்த படத்தை அறிமுக இயக்குனர் அனுசரண் இயக்கியிருக்கிறார். இப்படத்தின் கதையை ‘காக்கா முட்டை’ இயக்குனர் மணிகண்டனும், அனுசரணும் இணைந்து எழுதியிருக்கிறார்கள்.

’நாம் ஆரோக்கியமாக இருந்தால் நம்மை எந்த ‘கிருமி’யும் தாக்காது என்பது’ தான் இப்படத்தின் கதை கருவாம்! இப்படத்தில் ‘மதயானைக் கூட்டம்’ படத்தில் நடித்த கதிர் கதையின் நாயகனாக நடித்திருக்க, ரேஷ்மி மேனன் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் சார்லி, வனிதா, தென்னவன், மாரிமுத்து, தீனா, மகேந்திரன், தமிழ் செல்வி, ரவி வெங்கட்ராம் முதலானோரும் நடித்துள்ளனர். ல் இப்பட்த்தில் அனைத்து நடிகர், நடிகைகளும் மேக்-அப் இல்லாமல் யதார்த்த முகங்களுடன் நடித்திருப்பது தனி சிறப்பு!

கே. இசை அமைத்திருக்கும் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று காலை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. ஆடியோவை இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் வெளியிட, விஜய்சேதுபதி பெற்றுக்கொண்டார். இப்படத்தின் அனைத்து பாடல்களையும் ஞாகரவேல் எழுத, ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமிடம் உதவியாளராக இருந்த அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். அனைத்து வேலைகளும் முடிவடைந்துள்ள இப்படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கிருமி - டிரைலர்


;