இரும்பு மனிதனான கௌதம் மேனனின் வில்லன்!

இரும்பு மனிதனான கௌதம் மேனனின் வில்லன்!

செய்திகள் 22-Jul-2015 12:31 PM IST Chandru கருத்துக்கள்

விளம்பர மாடல் நடிகரும், பிரபல ஹிந்தி நடிகருமான மிலிந்த் சோமன் ‘பச்சைக்களி முத்துச்சரம்’ படத்தின் மூலம் கௌதம் மேனனால் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அப்படத்தில் வில்லனாக நடித்த மிலிந்த் சோமன் பலராலும் பாராட்டப்பட்டார். அதன்பிறகு கார்த்தியின் ‘பையா’, ‘அலெக்ஸ்பாண்டியன்’ பார்த்திபனின் ‘வித்தகன்’ ஆகிய படங்களிலும் நடித்தார். தற்போது மிகப்பிரம்மாண்டமாக தயாராகும் ஹிந்திப்படமான ‘பஜிரோ மஸ்தானி’ ஹிந்தி படத்தில் முக்கிய வேடமொன்றில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஒருபுறம் நடித்துக்கொண்டே பல போட்டிகளிலும் கலந்து கொண்டு பரிசை வெல்வது மிலிந்தின் வழக்கம். அந்த வகையில், 50 வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் நடிகர் மிலிந்த் சோமன் ‘இரும்பு மனிதன்’ என்ற பட்டத்தை வென்று பாலிவுட்டை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார். ஸ்விட்சர்லாந்தில் நடைபெறும் ‘அயர்ன்மேன் டிரைலத்தான்’ எனும் போட்டியில் கலந்து கொண்டு வெற்றிவாகை சூடியிருக்கிறார். இப்போட்டியில் 3.8 கி.மீ. தூரம் நீச்சலடித்து, 180.2 கி.மீ. தூரம் சைக்களில் சென்று அதன்பிறகு 42.2 கி.மீ. தூரம் ஓடி சாதனை புரிந்ததற்காக இந்தப் பட்டம் அவருக்குக் கிடைத்துள்ளது. மேற்கண்ட போட்டிகளை மொத்தம் 19 மணி நேரத்திற்குள்ளாகவே செய்து முடித்து அசத்தியிருக்கிறார் மிலிந்த். வாழ்த்துக்கள் ஜி!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

துருவ நட்சத்திரம் - டீசர் 2


;