தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர் மரணம்!

தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர் மரணம்!

செய்திகள் 22-Jul-2015 11:41 AM IST Chandru கருத்துக்கள்

நடிகர் விஜய்காந்தின் நெருங்கிய நண்பரும், தயாரிப்பாளருமான இப்ராஹிம் ராவுத்தர் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சமீபத்தில் அவரைச் சந்திப்பதற்காக மருத்துவமனைக்கு சென்ற விஜயகாந்த், அவர் சுயநினைவு இழந்து இருந்ததால் அவரிடம் பேசாமலேயே திரும்பி வந்தார். பின்னர், அவர் விரைவில் குணமடைய வேண்டி பத்திரிகையாளர்களுக்கு செய்திக்குறிப்பும் அனுப்பியிருந்தார்.

இந்நிலையில் அவரது உடல்நிலை மேலும் மோசமாகி, மருத்துவர்களின் சிகிச்சை எதுவும் கைகொடுக்காத நிலையில் இன்று இப்ராஹிம் ராவுத்தர் இன்னுயிர் நீத்துவிட்டார். தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களைத் தயாரித்திருக்கும் இப்ராஹிம் ராவுத்திரின் மறைவு விஜயகாந்திற்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகிற்கே பெரிய இழப்பாகும். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய ‘டாப் 10 சினிமா’ தனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;