‘சனிக்கிழமை’க்கு தங்கச் செயின் பரிசளித்த தனுஷ்!

‘சனிக்கிழமை’க்கு தங்கச் செயின் பரிசளித்த தனுஷ்!

செய்திகள் 22-Jul-2015 10:07 AM IST Chandru கருத்துக்கள்

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான தனுஷின் ‘மாரி’ திரைப்படம் அவரது கேரியரிலேயே பெரிய ஓபனிங் உள்ள படமாக அமைந்திருக்கிறது. அனிருத்தின் தர லோக்கல் மியூசிக்கிற்கு தனுஷ் ஆடிய குத்தாட்டம் பெரிதாக எடுபட இப்படம் இளைஞர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பிற்கு இன்னொரு முக்கிய காரணம் ரோபோ ஷங்கர். ‘சனிக்கிழமை’ என்ற கேரக்டரில் இப்படத்தில் நடித்த ரோபோ ஷங்கரின் அலட்டல் இல்லாத டைமிங் காமெடிகளுக்கு தியேட்டரில் பெரிய சிரிப்பலை எழுந்தது.

வளர்ந்துவரும் நடிகரான ரோபோ ஷங்கரின் திறமையைப் பாராட்டிய தனுஷ், ‘மாரி’யின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்ததற்காக தங்கச்செயின் ஒன்றை ரோபோ ஷங்கருக்கு பரிசளித்துள்ளார். ஏற்கெனவே, ‘காக்கா முட்டை’ படம் தேசிய விருது பெற்றதற்காக இயக்குனர் மணிகண்டன் மற்றும் படத்தில் நடித்த இரண்டு சிறுவர்களுக்கும் தனுஷ் தங்கச்செயின் பரிசளித்து கௌரவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

VTV 2 ஆம் பாகத்தில் நான் தான் ஜெஸ்ஸி - மேகா ஆகாஷ்


;