மலேசியாவில் ‘சாஹசம்’ பாடல் வெளியீடு!

மலேசியாவில் ‘சாஹசம்’ பாடல் வெளியீடு!

செய்திகள் 21-Jul-2015 3:12 PM IST VRC கருத்துக்கள்

பிரசாந்த் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு நடித்து வரும் படம் 'சாஹசம்'. இப்படத்தை ‘ஸ்டார் மூவீஸ்’ நிறுவனம் சார்பில் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் தயாரித்து வருகிறார். இப்படத்தில் பிரசாந்துக்கு ஜோடியாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த அழகி அமென்டா நடிக்க, ஒரு பாடலுக்கு பிரசாந்துடன் ஹாலிவுட் நடிகை நர்கிஸ் ஃபக்ரி ஒரு நடனம் ஆடியுள்ளார். இவர்களுடன் நாசர், தம்பி ராமையா, சோனுசூட், எம்.எஸ்.பாஸ்கர், ஜான் விஜய், துளசி, தேவதர்ஷினி மற்றும் பலர் நடித்து வருகின்றனர். எஸ்.எஸ்.தமன் இசை அமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு ஜப்பான் நாட்டில் நடைபெற்றது. படப்பிடிப்பு முடியும் கட்டத்தில் இருக்கும் ‘சாஹசம்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை மலேசியாவில் பிரம்மாண்டமான முறையில் நடத்த திட்டமிட்டுள்ளார்கள் பிரசாந்த் மற்றும் தியாகராஜன். அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 8-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியில் படத்தின் இசையமைப்பாளர் எஸ். தமன், நடிகர்கள் நாசர், தம்பி ராமையா, ரோபோ சங்கர், ஜான்விஜய், நளினி, மதன்பாப் மற்றும் பலர் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இந்த விழாவினை திவ்யதர்ஷினி தொகுத்து வழங்க இருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

புரூஸ் லீ - சுமார் மூஞ்சி குமார் பாடல் வீடியோ


;