பாகுபலி - பஜ்ரங்கி பைஜான் ஒற்றுமை!

பாகுபலி - பஜ்ரங்கி பைஜான் ஒற்றுமை!

செய்திகள் 21-Jul-2015 12:56 PM IST VRC கருத்துக்கள்

தென்னிந்திய சினிமா வரலாற்றில் அதிக வசூலை குவித்த படம் என்ற பெருமை ராஜமௌலியின் ‘பாகுபலி’க்கு கிடைத்துள்ளது. இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்த ஒருவர் மற்றொரு படத்தின் மாபெரும் வெற்றியிலும் முக்கிய பங்கு வகித்துள்ளார். கடந்த 17-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகி வசூல் அள்ளிக்கொண்டிருக்கும் ஹிந்தி படம் ‘பஜ்ரங்கி பைஜான்’. சல்மான் கான், கரீனா கபூர் ஜோடியாக நடித்த இப்படத்தை கபீர் கான் இயக்கியிருக்கிறார்.

‘பாகுபலி’ படத்திற்கு கதை எழுதிய விஜயேந்திர பிரசாத் தான் சல்மான் கானின் ‘பஜ்ரங்கி பைஜான்’ படத்திற்கும் கதை எழுதியிருக்கிறார். ஒருவார இடைவெளியில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்று ஓடிக்கொண்டிருக்கும் இந்த இரண்டு படங்களின் வெற்றியிலும் முக்கிய பங்கு வகித்துள்ள விஜயேந்திர பிரசாத் ‘பாகுபலி’ பட இயக்குனர் ராஜமௌலியின் தந்தை ஆவார்! ‘பாகுபலி’ 10 நாட்களில் 300 கோடிக்கும் மேல் வசூல் செய்து இன்னமும் ஓடிக் கொண்டிருக்க, சல்மான் கானின் ‘பஜ்ரங்கி பைஜான்’ 3 நாட்களில் 150 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. தான் கதை எழுதிய இரண்டு பிரம்மாண்ட படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகி மாபெரும் வசூலை குவித்து வருவதால் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார் விஜயேந்திர பிரசாத்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பாகுபலி 2 - பலே பலே பாடல் வீடியோ


;