‘என்னுள்ளில் உள்ளே எம்.எஸ்.வி.’ நிகழ்ச்சி குறித்து இளையராஜா!

‘என்னுள்ளில் உள்ளே எம்.எஸ்.வி.’ நிகழ்ச்சி குறித்து இளையராஜா!

செய்திகள் 21-Jul-2015 12:27 PM IST VRC கருத்துக்கள்

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் மறைந்ததை ஒட்டி, அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இளையராஜா ‘என்னுள்ளில் உள்ளே எம்.எஸ்.வி’ என்ற தலைப்பில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தப் போகிறார். வருகிற 27-ஆம் தேதி சென்னை, காமராஜர் அரங்கத்தில் நடைபெறவிருக்கிற இந்த நிகழ்ச்சி குறித்து இளையரஜா கூறும்போது,

‘‘எம்.எஸ்.விஸ்வநதன் அண்ணனின் இசைத்திறமையும், ஆளுமையும் அனைவரும் அறிந்ததே. அவரது இசை நுணுக்கங்களை நான் அறிந்த அளவுக்கு வேறு யாரும் அறிந்திருக்க மாட்டார்கள்! இந்த இசை நுணுக்கங்களையெல்லாம் எல்லோருக்கும் வெளிப்படுத்தும் வகையில் சிறு இசைக் குழுவினருடன் நான் வாசித்து காட்ட இருக்கிறேன். அவர், எவ்வளவு பெரிய விஷயங்களை எப்படி சர்வ சாதாரணமாக செய்து காட்டியிருக்கிறார் என்பதை மக்களுக்கு நான் தெரியப்படுத்தப் போகிறேன்! இசையில் ஒவ்வொருவருடைய கற்பனையும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். நம்மை எங்கோ அழைத்து செல்லுகின்ற உணர்வை கொண்டுவருவது அவ்வளவு சதாரணமான விஷயம் அல்ல. இதை நான் நன்றாக அறிந்திருக்கிறேன். இதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதால் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறேன். அவர் உடலை விட்டு உயிர் பிரிந்து சென்றாலும் அவர் என்றும் மறையாத நித்ய சொரூபர். எம்.எஸ்.வி.யின் இசைத்திறமையை வெளிப்படுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சி இருக்கும்” என்றார் இளையராஜா!
இந்த இசைநிகழ்ச்சி ஜீவா இளையராஜா கல்வி அறக்கட்டளை சார்பாக நடத்தப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வெள்ளை கனவு வீடியோ பாடல் - புரியாத புதிர்


;