கொல்கத்தா பயணத்திற்கு தயாராகும் அஜித்!

கொல்கத்தா பயணத்திற்கு தயாராகும் அஜித்!

செய்திகள் 21-Jul-2015 11:39 AM IST Chandru கருத்துக்கள்

‘வீரம்’ சிவா இயக்கத்தில் அஜித், ஸ்ருதிஹாசன் நடிக்கும் ‘தல 56’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கின்றன. சென்னையின் பிரபல கல்லூரி ஒன்றில் அஜித் மற்றும் அவரது தங்கையாக நடிக்கும் லக்ஷ்மிமேனன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து ‘தல 56’ டீம் இத்தாலிக்குப் பறந்தது. அங்கே அஜித், ஸ்ருதிஹாசன் பங்குபெறும் ஒரு பாடல் உள்பட சில காட்சிகளைப் படமாக்கிவிட்டு தற்போது மீண்டும் சென்னை திரும்பியிருக்கிறார்கள். இன்னும் ஒரு சில நாட்களில் அஜித் உள்ளிட்ட படக்குழு கொல்கத்தாவிற்குப் பயணமாகவிருக்கிறதாம். கொல்காத்தா மற்றும் அருகிலுள்ள சில இடங்களில் நடக்கவிருக்கும் படப்பிடிப்பில் லக்ஷ்மிமேனன், ‘மங்காத்தா’ அஸ்வின் உள்ளிட்டோரும் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விசிறி - டிரைலர்


;