இன்று சிவாஜி நினைவு தினம்!

இன்று சிவாஜி நினைவு தினம்!

செய்திகள் 21-Jul-2015 11:31 AM IST VRC கருத்துக்கள்

இந்திய சினிமாவில் நிகரில்லா நடிகராக விளங்கியவர் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன். ‘நடிப்பு’ என்றால் நம் நினைவுக்கு வரும் முதல் நடிகர் இவராகத்தான் இருக்க முடியும்! 1952-ஆம் ஆண்டு ‘பராசக்தி’ எனும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஏராளமான படங்களில் நடித்த சிவாஜி கணேசன் கடைசியாக நடித்த தமிழ் படம் ரஜினியின் ‘படையப்பா’. கிட்டத்தட்ட 50 ஆண்டு காலம் சினிமாவில் பெரும் ஜாம்பவானாக விளங்கிய சிவாஜி கடந்த 2001-ஆம் ஆண்டு இதே தினம் (ஜூலை-21) காலமானார். இந்திய சினிமாவில் முடிசூடா மன்னனாக விளங்கிய சிவாஜியின் நினைவு தினம் இன்று! சினிமா இருக்கும் காலம் வரை சிவாஜியின் புகழும், பெயரும் நிலைத்து நிற்கும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இந்திரஜித் - ட்ரைலர்


;