வசூலில் சாதனை படைத்து வரும் ‘மாரி’

வசூலில் சாதனை படைத்து வரும் ‘மாரி’

செய்திகள் 21-Jul-2015 11:10 AM IST Chandru கருத்துக்கள்

தனுஷ், காஜல் அகர்வால் நடிக்க பாலாஜி மோகன் இயக்கியுள்ள ‘மாரி’ திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. அனிருத்தின் பாடல்கள், தனுஷின் தர லோக்கல் டான்ஸ் என இப்படத்தின்மீது ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு நிலவியதால் மிகப்பெரிய ஓபனிங் கிடைத்தது. முதல் நாளில் தமிழகத்தில் மட்டுமே 6.5 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது மாரி. தனுஷ் படங்களைப் பொறுத்தவரை இதுவே அவரது முதல் நாள் அதிகபட்ச கலெக்ஷன்.

இப்படத்தின் மீதான விமர்சனங்கள் இருவேறாக இருந்தபோதும், இளைஞர்களை... குறிப்பாக டீன் ஏஜ் வயதினரை அதிகம் கவர்ந்துள்ளதால் தியேட்டர்களில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமாக ரசிகர்கள் ‘மாரி’ படத்தை பார்த்து வருகின்றனர். இதனால் முதல் 3 நாட்களில் இப்படம் கிட்டத்தட்ட 20 கோடிகளை தமிழகத்தில் மட்டுமே வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. ‘முதல் 3 நாள் கலெக்ஷனில் தனுஷின் அதிபட்ச கலெக்ஷன் இதுதான்’ என்ற சாதனையைப் படைத்துள்ளது மாரி.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - டீசர்


;