3 நாளில் 150 கோடி : சல்மான் கானின் அதிரடி கலெக்ஷன்!

3 நாளில் 150 கோடி : சல்மான் கானின் அதிரடி கலெக்ஷன்!

செய்திகள் 21-Jul-2015 10:48 AM IST Chandru கருத்துக்கள்

‘பாலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் நாயகன்’ சல்மான் கான் நடிப்பில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளிவந்த ‘பஜ்ரங்கி பைஜான்’ ஹிந்தி படம் வசூல் மழை பொழிந்து கொண்டிருக்கிறது. இந்தியா & பாகிஸ்தான் இடையே நட்புறவைப் பேணும் வகையில் கதை அமைக்கப்பட்டுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. சல்மான் கான் படங்களிலேயே சிறந்த கதை என்றும் பல விமர்சனங்களில் இப்படம் குறித்து புகழ்ந்து தள்ளியுள்ளார்கள்.

இப்படம் 3 நாட்களில் 150 கோடிகளை வசூல் செய்து அசத்தியிருக்கிறது. இந்தியாவில் மட்டுமே 100 கோடிகளை வசூல் செய்துள்ள ‘பஜ்ரங்கி பைஜான்’, வெளிநாடுகளில் மட்டும் 50 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இப்படம் மேலும் பல வசூல் சாதனைகளைப் படைக்கும் என கூறப்படுகிறது.

சமீபத்தில் வெளியான ‘பாகுபலி’ திரைப்படம் 10 நாட்களில் 300 கோடிக்கும் மேல் வசூல் செய்து, இன்னும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. உலகளவிலான வசூலில் இந்திய அளவில் முதல் இரண்டு இடங்களை அமீர் கானின் பிகே மற்றும் தூம் 3 படங்கள் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சுல்தான் - டிரைலர்


;