ஜூலை 24ல் ‘புலி’ படத்தின் முதல் இசை விருந்து!

ஜூலை 24ல் ‘புலி’ படத்தின் முதல் இசை விருந்து!

செய்திகள் 21-Jul-2015 10:34 AM IST Chandru கருத்துக்கள்

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப் உட்பட தமிழ் சினிமாவின் நட்சத்திரங்கள் பலரும் நடித்துள்ள ‘புலி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி, 60 லட்சத்திற்கும் மேற்பட்டோரால் கண்டுகளிக்கப்பட்டுள்ளது. தற்போது விஜய் ரசிகர்களுக்கு மேலும் ஒரு சிறப்பு விருந்து காத்திருக்கிறது.

வரும் 24ஆம் தேதி தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் உருவாகியிருக்கும் ‘புலி’ படப்பாடல்களில் ஒன்றான ‘ஏன்டி ஏன்டி...’ என்ற பாடலின் புரமோ டீஸர் வெளிவரவிருக்கிறது. விஜய், ஸ்ருதிஹாசன் இணைந்து பாடியுள்ள இப்பாடல் இந்த வருடத்தின் சூப்பர்ஹிட் ரொமான்டிக் பாடலாக இடம்பிடிக்கும் என்கிறது ‘புலி’ டீம். ஷிபு தமீம்ஸ், பி.டி.செல்வகுமார் இணைந்து தயாரித்துள்ள இப்படம் செப்டம்பர் 17ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கரு - டிரைலர்


;