ஜே.எஸ்.கே.யின் அதிரடி ரிலீஸ் ப்ளான்!

ஜே.எஸ்.கே.யின் அதிரடி ரிலீஸ் ப்ளான்!

செய்திகள் 20-Jul-2015 2:54 PM IST VRC கருத்துக்கள்

ஜே.எஸ்.கே.யின் அதிரடி ரிலீஸ் ப்ளான்!
பெரும் எதிர்பார்ப்பில் இருந்த கமல்ஹாசனின் ‘பாபநாசம்’, ராஜமௌலியின் ‘பாகுபலி’, தனுஷின் ‘மாரி’ ஆகிய படங்களின் வெளியீட்டை தொடர்ந்து, பல படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. ஏற்கெனவே ஜூன் 10-ஆம் தேதி ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்ட படம் ஜே.எஸ்.கே. ஃபிலிம் கார்பரேஷனின் ‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’. ஆனால் கமல்ஹாசனின் ‘பாபநாசம்’ படத்தை ஜூன் 10-ல் வெளியிட அப்படக் குழுவினர் தீர்மானித்ததை தொடர்ந்து ‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’ படத்தின் ரிலீஸை இம்மாதம் 31-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்கள்! ஆனால் இதே தினம் ‘ஜெயம்’ ரவியின் ‘சகலகலா வல்லவன் அப்பா டக்கர்’, விஜய்சேதுபதியின் ‘ஆரஞ்சு மிட்டாய்’, விக்ராந்தின் ‘தாக்க தாக்க’ ஆகிய படங்களின் ரிலீஸ் அறிவிப்புகள் வந்து கொண்டிருப்பதால் மீண்டும் ‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’ படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றி அமைத்திருக்கிறார்கள். அதாவது ஒரு வாரம் முன்னதாக, 24-ஆம் தேதி ரிலீஸ் என்று அறிவித்திருக்கிறார்கள்! இதே தினம் உதயா கதாநாயகனக நடித்துள்ள ‘ஆவிக்குமார்’ மற்றும் ‘குருசுக்ரன்’, ‘திரைப்பட நகரம்’ ஆகிய படங்களும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இரவுக்கு ஆயிரம் கண்கள் - டிரைலர்


;