ரஜினி படத்தில் ராதிகா ஆப்தே?

ரஜினி படத்தில் ராதிகா ஆப்தே?

செய்திகள் 20-Jul-2015 11:52 AM IST VRC கருத்துக்கள்

கார்த்தியை வைத்து ‘மெட்ராஸ்’ வெற்றிப் படத்தை இயக்கிய பா.ரஞ்சித், அடுத்து ரஜினிகாந்தை இயக்க இருக்கிறார். ‘கலைப்புலி’ எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்தின் ப்ரீ-புரொடக்‌ஷன் வேலைகள் முடிந்து விட்டதாம்! இப்படத்தின் படப்பிடிப்பை அடுத்த மாதம் துவங்க திட்டமிட்டிருக்கிறார்கள். இசைக்கு சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவுக்கு முரளி, படத்தொகுப்புக்கு எல்.பிரவீன், நடிப்புக்கு கலையரசன் என்று ரஞ்சித்துடன் ‘மெட்ராஸ்’ படத்தில் பணிபுரிந்த பலர் இப்படத்திலும் பணிபுரிய இருக்கிறார்கள்! ரஜினி இப்படத்தில் வித்தியாசமான ஒரு கேரடக்டரில் நடிக்க இருக்கிறார் என்றும், அவருக்கு படத்தில் ஜோடி இல்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் கார்த்தியுடன் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படத்தில் நடித்த பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தேயிடம் இப்படத்தின் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க பேச்சு வார்த்தை நடத்தியிருப்பதாகவும், அவர் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இது சம்பந்தமான எந்த அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மேயாத மான் - தங்கச்சி பாடல் வீடியோ


;