ஜூலை 31-ல் அஞ்சலியின் டபுள் ட்ரீட்!

ஜூலை 31-ல் அஞ்சலியின் டபுள் ட்ரீட்!

செய்திகள் 20-Jul-2015 11:52 AM IST VRC கருத்துக்கள்

‘அஞ்சலி’ ஹீரோயினாக நடித்து கடைசியாக வெளியான தமிழ் படம் ‘சேட்டை’. இந்த படத்தை தொடர்ந்து சூர்யாவின் ‘சிங்கம்-2’ படத்தில் ஒரு பாடலுக்கும் நடனம் ஆடினார்! இப்படத்தை தொடர்ந்து தெலுங்கு படங்களில் அதிக கவனம் செலுத்தி வந்த அஞ்சலி, மீண்டும் தமிழுக்கு வந்து நடித்த படங்கள் ‘மாப்ள சிங்கம்’ மற்றும் ‘சகலகலா வல்லவன் - அப்பா டக்கர்’. இதில் ‘மாப்ள சிங்கம்’ படத்தில் விமலுக்கு ஜோடியாக நடிக்க, ‘சகலகலா வல்லவன் - அப்பா டக்கர்’ படத்தில் ‘ஜெயம்’ ரவியுடன் இணைந்து நடித்துள்ளார். அனைத்து வேலைகளும் முடிந்துள்ள இந்த இரண்டு படங்களும் இம்மாதம் 31-ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறது. ஒரே நாளில் தான் நடித்த இரண்டு படங்களும் வெளியாக இருப்பதால் ‘டபுள்’ சந்தோஷத்தில் இருக்கிறார் அஞ்சலி! தற்போது ‘இரைவி’ என்ற படத்தில் நடித்து வரும் அஞ்சலி நடித்து முடித்துள்ள இன்னொரு படம் விஷாலின் ‘மதகஜராஜா’. இப்படம் பல சிக்கல்கள் ஏற்பட்டு வெளியாகாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தரமணி - யாரோ உச்சிக்கிளை பாடல் வீடியோ


;