வசூலில் புதிய சாதனை படைத்த ‘பாகுபலி

வசூலில் புதிய சாதனை படைத்த ‘பாகுபலி

செய்திகள் 20-Jul-2015 10:46 AM IST VRC கருத்துக்கள்

எஸ்.எஸ்.ராஜமௌலியின் பிரம்மாண்ட படைப்பான ‘பாகுபலி’ படம் தென்னிந்திய சினிமாவின் அனைத்து சாதனைகளையும் முறியடித்துள்ளது. கடந்த 10-ஆம் தேதி வெளியான இப்படம் முதல் நாளிலேயே பெரும் வசூல் செய்து சாதனை புரிந்தது. இப்போது படம் வெளியாகிய 10 நாட்களில் 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து தென்னிந்திய சினிமாவின் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமைய குறுகிய காலத்தில் பெற்றுள்ளது.

தமிழ் சினிமாவை பொறுத்தவரை அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை ஷங்கரின் ‘எந்திரன்’ தக்கவைத்து கொண்டிருந்த்து. இப்போது அந்த சாதனையை ராஜமௌலியின் ‘பாகுபலி’ முறியடித்துள்ளது. 10 நாட்களிலேயே 300 கோடிக்கும் மேல் கலெக்‌ஷன் செய்துள்ள ‘பாகுபலி’, இனி வரும் நாட்களில் எவ்வளவு கோடிகளை அள்ளும் என்பது தான் தற்போது அனைவரது எதிர்பார்ப்பு! ‘பாகுபலி’ மொத்த இந்திய சினிமாவே திரும்பி பார்க்க வைத்துள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பாகுபலி 2 - பலே பலே பாடல் வீடியோ


;