‘‘சத்யராஜ் தலையில் கால் வைத்து நடிக்க பயந்தேன்!’’ – பிரபாஸ்

‘‘சத்யராஜ் தலையில் கால் வைத்து நடிக்க பயந்தேன்!’’ – பிரபாஸ்

செய்திகள் 19-Jul-2015 7:26 AM IST VRC கருத்துக்கள்

சமீபத்தில் உலகம் முழுக்க வெளியாகி வசூலில் சாதனை படைத்துள்ள படம் ‘பாகுபலி’. வெளியாகிய ஒரு வார காலத்திலேயே 250 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ள இப்படத்தின் சக்சஸ் மீட் நேற்று (18-7-2015) மாலை சென்னையில் நடைபெற்றது. இப்படத்தில் பாகுபலியாக நடித்த பிரபாஸ், ரம்யா கிருஷ்ணன், இப்படத்தின் தமிழக உரிமையாளர் ‘ஸ்டுடியோ கிரீன்’ ஞானவேல் ராஜா உட்பட பலர் இதில் கலந்துகொண்டு படத்தின் மாபெரும் வெற்றிக்கு உறுதுணை புரிந்த அத்தனை பேருக்கும் நன்றி கூறினர். அபோது நடிகர் பிரபாஸ் பேசும்போது,

‘‘பாகுபலி’ படத்தின் வெற்றிக்கு உறுதுணை புரிந்த ரசிகர்கள், பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ‘பாகுபலி’ படத்திற்காக கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் உழைத்தேன். இப்போது இந்திய அளவில் எனக்கு பெரும் புகழ் கிடைத்துள்ளது. இதற்கு காரணம் இயக்குனர் ராஜமௌலி தான். அவருக்கு நான் வாழ் நாள் முழுக்க நன்றிக் கடன் பட்டுள்ளேன்.

மேலும் இந்த படத்தில் இன்னொரு ஹீரோவை போன்ற கேரக்டரில் சத்யராஜ் சார் நடித்துள்ளார். ஒரு காட்சியில் அவரது தலையில் நான் கால் வைத்தபடி நடிக்க வேண்டும் என்று டைரக்டர் ராஜமௌலி சொன்னபோது நடுங்கி விட்டேன். காரணம் அவர் மிகப் பெரிய ஒரு நடிகர். சீனியர் நடிகரான அவர் ஒரு தெலுங்கு படத்தில் எனக்கு அப்பாவாக கூட நடித்திருக்கிறார். அப்படிப்பட்ட சத்யராஜ் சார் தலையில் நான் காலை வைத்து நடிப்பதா? என்று ராஜமௌலியிடம் தயங்கினேன். ஆனால் நான் தயங்கிய விஷயம் கேட்ட சத்யராஜ் சார், ‘காட்சிக்கு தேவை என்றால் அப்படி நடிப்பதில் எந்த தப்பும் இல்லை! தைரியமாக நடியுங்கள்’ என்று சொல்லி எனது தயக்கத்தை போக்கினார். அதனால்தான் அந்த காட்சியில் என்னால் சிறப்பாக நடிக்க முடிந்தது.

இந்த படம் எனக்கு தமிழில் தந்துள்ள வரவேற்பை பார்க்கும்போது தமிழ் படங்களிலும் நடிக்க வேண்டும் என்ற ஆசை பிறந்துள்ளது. நல்ல வாய்ப்புகள் வந்தால் தமிழ் படங்களிலும் நடிப்பேன். அடுத்த ஆண்டு ‘பாகுபலி’ படத்தின் இரண்டாம் பாகம் வெளிவரவிருக்கிறது. அந்த பாகத்தின் 40 சதவிகித படப்பிடிப்பு முடிந்து விட்டது. இனி 60 சதவிகித படப்பிடிப்பு நடக்க ருக்கிறது. செப்டம்பர் மாதம் மீதி காட்சிகளின் படப்பிடிப்பு தவங்கி விடும்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பாகுபலி 2 - பலே பலே பாடல் வீடியோ


;