‘பாகுபலி’யின் ஒரு வார பிரம்மாண்ட வசூல்!

‘பாகுபலி’யின் ஒரு வார பிரம்மாண்ட வசூல்!

செய்திகள் 18-Jul-2015 12:24 PM IST VRC கருத்துக்கள்

கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை-10) உலகம் முழுக்க வெளியாகி அமோக வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘பாகுபலி’. இந்திய சினிமாவை பொறுத்த வரையில் மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவான படம் ‘பாகுபலி’ என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இந்த படம் வசூலிலும் பெரிய சாதனை படைத்துள்ளது. கடந்த 10-ஆம் தேதி வெளியான இப்படம் 7 நாட்களில் மட்டும் 265 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதுவரை தென்னிந்திய சினிமாவில் வெளியான எந்த ஒரு படமும் இவ்வளவு வசூலை அள்ளியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் கிட்டத்தட்ட 250 கோடி ரூபாய் செலவில் தயாராகி இருப்பதாக கூறப்படுகிறது. ஒரு வாரத்திலேயே தயாரிப்பு செலவை விட அதிகம் வசூல் செய்து சாதனை படைத்துள்ள இப்படம் இனி வரும் நாட்களில் எவ்வளவு கோடிகளை அள்ளும் என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டும்! இந்தப் படம் இயக்குனர் ராஜமௌலி, பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா என இப்படத்தில் பணியாற்றிய அனைவரது வாழ்க்கையிலும் மறக்க முடியாத ஒரு படமாகி விட்டது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;