‘கலைவேந்தன்’ படத்தில் ஓவினாம் தற்காப்பு கலை!

‘கலைவேந்தன்’ படத்தில் ஓவினாம் தற்காப்பு கலை!

செய்திகள் 18-Jul-2015 11:09 AM IST VRC கருத்துக்கள்

‘எஸ்.கே.ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்’ பட நிறுவனம் சார்பாக எஸ்.கமலகண்ணன் தயாரிக்கும் படம் ‘கலைவேந்தன்’. இப்படத்தில் கதாநாயகனாக அஜய் நடிக்க, கதாநாயகியாக சனம் ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் முக்கிய வேடத்தில் கலாபவன் மணி மற்றும் மனோபாலா, டி.பி.கஜேந்திரன், அனுமோகன், காதல் சுகுமார், ஆர்த்தி, சம்பத்ராம், நளினி, ‘தலைவாசல்’ விஜய் ஆகியோரும் நடிக்கிறார்கள். இப்படத்தின் கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்கும் ஆர்.கே.பரசுராம் படம் குறித்து பேசும்போது,

‘‘ஓவினாம் என்பது (வியட்நாம் நாட்டு தற்காப்பு கலை) கராத்தே, ஜூடோ போன்ற தற்காப்பு கலைகளில் ஒன்று. இந்த தற்காப்பு கலையை கற்று கொடுக்கும் மாஸ்டராக வரும் நாயகனுக்கும், நாயகி சனம் ஷெட்டிக்கும் காதல்! இவர்கள் காதலுக்கு ஒரு பிரச்சனை வருகிறது. நாயகியின் பெற்றோரால் அது மேலும் பெரிதாகிறது. இதற்கிடையில் நாயகி கொல்லப்படுகிறாள். கொலை செய்யப்பட்ட தன் காதலியின் கொலைக்கு காரணமானவன் யார் என்று கண்டறிந்து பழி வாங்குவதுதான் படத்தின் திரைக்கதை. இப்படத்தின் சண்டைக்காட்சிகள் பின்னி மில் மற்றும் ரெட்டேரி லாரி கிடங்குகளில் மிக பிரமாண்டமாக படமாக்கி உள்ளோம்.
ஒவினாம் தற்காப்பு கலைப் பின்னணி கொண்ட படம் இது என்பதால் இக்கலையில் பயிற்சி பெற்ற நூறு ஒவினாம் கலைஞர்கள் காரைகாலில் இருந்து அழைத்து வரப்பட்டு படப்பிடிப்பு நடந்தது. பொதுவாக குத்து பாடல்களில் பெயர் வாங்கும் ஸ்ரீகாந்த் தேவா இப்படத்தில் அருமையான மெலடி பாடல்களை தந்துள்ளார். காமெடி, காதல் கலந்த ஆக்ஷன், த்ரில்லர் படமாக ‘கலைவேந்தன்’ உருவாகி உள்ளது’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இமைக்கா நொடிகள் - டீஸர்


;