24-ல் வெளியாகிறது விஜய் படம்!

24-ல் வெளியாகிறது விஜய் படம்!

செய்திகள் 18-Jul-2015 10:37 AM IST VRC கருத்துக்கள்

‘சூப்பர் குட் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்து நேசன் இயக்கிய படம் ‘ஜில்லா’. விஜய், மோகன்லால், காஜல் அகர்வால், பூர்ணிமா பாக்யராஜ் முதலானோர் நடித்த இப்படம் கடந்த 2014 ஜனவரி மாதம் 10-ஆம் தேதி வெளியானது. ரசிகர்களிடம் பரவலான வரவேற்பைப் பெற்ற இப்படம் ஆந்திராவில் ஒரு சில தியேட்டர்களில் மட்டும் நேரடியாக வெளியிடப்பட்டது. ஆந்திராவில் விஜய்க்கும் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். அதனால் இப்படத்தை தெலுங்கு மொழியில் டப்பிங் செய்து வெளியி திட்டமிட்டு அதற்கான வேலைகளை செய்து வந்தனர். இந்நிலையில் ‘ஜில்லா’ தெலுங்கு படத்தை இம்மாதம் 24-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டு தியேட்டர்களை ஒப்பந்தம் செய்யும் வேலையில் மும்முரமாக இயங்கி வருகிறார்கள்! இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;