வி.எஸ்.ஓ.பி. V/S தனி ஒருவன்!

வி.எஸ்.ஓ.பி. V/S தனி ஒருவன்!

செய்திகள் 17-Jul-2015 12:01 PM IST VRC கருத்துக்கள்

ஜெயம்’ ரவி, நயன்தாரா நடிப்பில் மோகன் ராஜா இயக்கியுள்ள படம் ‘தனி ஒருவன்’. ‘ஏ.ஜி.எஸ்.என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரித்துள்ள இப்படத்தில் அரவிந்த் சாமி மாறுபட்ட ஒரு கேரக்டரில் நடித்துள்ளார். மோகன் ராஜாவும் ‘ஜெயம்’ ரவியும் இணையும் ஆறாவது படம் இது. இந்த படத்தை ஆகஸ்ட் மாதம் 14-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டு அதற்கான வேலைகளை பரபரப்பாக செய்து வருகிறது ஏ.ஜி.எஸ்.நிறுவனம்! 400-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது ஏ.ஜி.எஸ்.நிறுவனம். ‘ஜெயம்’ ரவியும் அவரது அண்ணன் ராஜாவும் இணைந்து உருவாக்கிய அத்தனை படங்களும் வெற்றிப் படங்களாக அமைந்துள்ளதால் ‘தனி ஒருவன்’ மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா, தமன்னா, சந்தானம் முதலானோர் நடித்துள்ள படம் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’. படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வரும் இப்படத்தின் சிங்கிள் டிராக் ஒன்றை இம்மாதம் 21-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர். இதனை தொடர்ந்து படத்தின் அனைத்து பாடல்களை இம்மாதம் 29-ஆம் தேதியும், படத்தை சுந்தந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 14-ஆம் தேதியும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ வெற்றிப் படத்தை தொடர்ந்து எம்.ராஜேஷ், ஆர்யா, சந்தானம் முதலானோர் இணைந்துள்ள படம் ‘வி.எஸ்.ஓ.பி.’ என்பதாலும், ஆர்யா நடிக்கும் 25-ஆவது படம் என்பதாலும் இப்படம் மீது பெரிய எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
இப்படி, பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் ‘வி.எஸ்.ஓ.பி.’யும், ‘தனி ஒருவ’னும் ஒரே தினம் வெளியாக இருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

திருட்டுப்பயலே 2 - நீண்ட நான் பாடல்


;