ஏ.ஆர்.முருகதாஸ், லிங்குசாமி உதவியாளர் இயக்கும் படம்!

ஏ.ஆர்.முருகதாஸ், லிங்குசாமி உதவியாளர் இயக்கும் படம்!

செய்திகள் 17-Jul-2015 10:27 AM IST VRC கருத்துக்கள்

ஏ.ஆர்.முருகதாஸுடன் ஹிந்தி ‘கஜினி’ படத்திலும், லிங்குசாமியுடன் ‘அஞ்சான்’ படத்திலும் உதவி இயக்குனராக பணியாற்றியவர் சாதிக் கான். இவர் ‘தொலைக்காட்சி’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படத்தை ‘கயலாலயா’ நிறுவனம் சார்பில் ராஜா பாலசெந்தில் தயாரிக்கிறார். இந்த படத்தில் ‘மங்காத்தா’ ‘மேகா’, ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ ஆகிய படங்களில் நடித்த அஸ்வின் கதாநாயகனாக நடிக்கிறார். இவருடன் சாந்தினி ஸ்ரீதரன், ‘லொள்ளு சபா’ ஜீவா, மதுமிதா, மனோபாலா, மயில்சாமி ஆகியோரும் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு தரன் இசை அமைக்கிறார். ‘மைனா’, ‘கும்கி’ படங்களில் படத்தொகுப்பாளராக பணியாற்றிய எல்.வி.தாசன் எடிட்டிங் செய்கிறார். ‘தொலைக்காட்சி’ காதல், சமூக பார்வை கொண்ட நகைச்சுவை படமாக உருவாகிறதாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கடுகு - டீசர்


;