விஷ்ணுவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

விஷ்ணுவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

செய்திகள் 17-Jul-2015 10:27 AM IST VRC கருத்துக்கள்

‘வெண்ணிலா கபடிக் குழு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அனைவரது மனதிலும் இடம் பிடித்த நடிகர் விஷ்ணு விஷால்! இவர் நடித்த படங்களின் எண்ணிக்கை மிகக் குறைவு என்றாலும், அதில் பெரும்பாலான படங்கள் விஷ்ணுவை நினைவில் வைத்துக் கொள்ளும் படியான படங்களாக அமைந்தன என்பதில் மாற்று கருத்து இருக்க வாய்ப்பில்லை! இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் ‘இன்று நேற்று நாளை’ படம் அவருக்கு மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்துள்ளது. இந்த படத்தை தொடர்ந்து ‘இடம் பொருள் ஏவல்’, ‘வீர தீர சூரன்’, ‘போடா, ஆண்டவனே என் பக்கம்’ என பல படங்கள் வரிசையாக ரிலீசாகவிருக்கிறது. ‘இன்று நேற்று நாளை’ பட வெற்றியின் மகிழ்ச்சியுடன் இன்று தனது பிறந்த நாள் கொண்டாடுகிறார் விஷ்ணு விஷால்! பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்களின் வாழ்த்துக்களுடன் இன்று பிறந்த நாள் காணும் விஷ்ணு விஷாலுக்கு ‘டாப்10 சினிமா’வும் தனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கதாநாயகன் - டிரைலர்


;