அர்ஜுனை இயக்கும் அருண்வைத்தியநாதன்!

அர்ஜுனை இயக்கும் அருண்வைத்தியநாதன்!

செய்திகள் 17-Jul-2015 10:27 AM IST VRC கருத்துக்கள்

தமிழில் ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ மற்றும் மலையாளத்தில் மோகன்லால் நடித்த ‘பெருச்சாழி’ ஆகிய படங்களை இயக்கியவர் அருண் வைத்தியநாதன். இவர் அடுத்து இயக்கும் படத்தில் அர்ஜுன் கதாநாயகனாக நடிக்கிறார். அர்ஜுன் வித்தியாசமான போலீஸ் அதிகாரி வேடமெற்று நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் துவங்கவிருக்கிறது. சென்னை, பெங்களூர் ஆகிய இடங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது. ஆக்‌ஷனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படமாம் இது. இந்த படத்திற்கான மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு தற்போது நடந்து வருகிறது. இப்படம் சம்பந்தமான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நிபுணன் - டிரைலர்


;