‘புலி’ விஜய் தரும் மற்றொரு சர்ப்ரைஸ்!

‘புலி’ விஜய் தரும் மற்றொரு சர்ப்ரைஸ்!

செய்திகள் 16-Jul-2015 10:03 PM IST VRC கருத்துக்கள்

விஜய் ஏற்கெனவே தான் நடித்த சில படங்களுக்காக பாடல்களை பாடியிருக்கிறார். ஆனால் சமீபகாலமாக தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திற்காகவும் பாடலை பாடுவதை ஒரு வழக்கமாக கடை பிடித்து வருகிறார். ‘துப்பாக்கி’ படத்திற்காக ‘கூகுள் கூகுள்...’ என்ற பாடலை பாடிய விஜய் தொடர்ந்து ‘தலைவா’, ‘ஜில்லா’, ‘கத்தி’ ஆகிய படங்களுக்காகவும் பாடல்களை பாடினார். அந்த பாடல்கள் அத்தனையும் ஹிட் பாடல்களாக அமையவும் செய்தன. அந்த வரிசையில் விஜய் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்போடு உருவாகி வரும் ‘புலி’ படத்திற்காகவும் ஒரு பாடலை பாடியுள்ளார் விஜய். இதில் இன்னொரு விசேஷம் என்னவென்றால் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் ஸ்ருதி ஹாசனும் இப்பாடலில் விஜய்யுடன் இணைந்து பாடியிருப்பது தான்! தேவிஸ்ரீபிரசாத் இசை அமைப்பில் இந்த பாடல் பதிவு சமீபத்தில் நடைபெற்றுள்ளது. இதனால் ‘புலி’ படம் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;