‘பாஹுபலி’ வெற்றி ‘மாரி’யை பாதிக்குமா? - தனுஷ் விளக்கம்

‘பாஹுபலி’ வெற்றி ‘மாரி’யை பாதிக்குமா?  - தனுஷ் விளக்கம்

செய்திகள் 16-Jul-2015 5:24 PM IST VRC கருத்துக்கள்

தனுஷ் நடித்துள்ள ‘மாரி’ நாளை வெளியாகவிருக்கிற நிலையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார் தனுஷ்! அப்போது அவரிடம், ‘பாஹுபலி’ மிகப் பெரிய வெற்றியை பெற்று தொடர்ந்து ஓடிக்கொண்டிருப்பதால் இது ‘மாரி’ படத்தை பாதிக்குமா?” என்று கேட்டனர். அதற்கு தனுஷ் பதிலளிக்கும்போது, ’‘பாஹுபலி’ கடந்த வாரம் வெளியானது. ‘மாரி’ நாளை தான் ரிலீசாகிறது. ‘பாஹுபலி’ படத்தின் வெற்றி ஒருபோதும் ‘மாரி’யை பாதிக்காது. காரணம் ’பாஹுபலி’ படத்திற்கான ஆடியன்ஸ் வேறு, ‘மாரி’க்கான ஆடியன்ஸ் வேறு! அந்த படத்திற்கும் ‘மாரி’ படத்திற்கும் எந்த சமபந்தமும் இல்லை! ஒரே தினம் இரண்டு படங்களும் ரிலீசாகியிருந்தால் ஒருவேளை சிறிய பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். ஆனால் அந்த படம் ரிலீசாகி ஒரு வாரம் கழித்துத்தானே மாரி வருகிறது. அதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எனை நோக்கி பாயும் தோட்டா - விசிறி ஆடியோ பாடல்


;