‘மாயா’ சென்சார் முடிந்தது… விரைவில் திரையில்!

‘மாயா’ சென்சார் முடிந்தது… விரைவில் திரையில்!

செய்திகள் 16-Jul-2015 2:06 PM IST VRC கருத்துக்கள்

நயன்தாரா நாயகியாக நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் படம் ‘மாயா’. ‘பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரித்து, அறிமுக இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கியுள்ள இப்படம் இன்று காலை சென்சாருக்கு சென்றது. ஹாரர் பட வரிசையில் வித்தியாசமான கதை அமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் ‘நீட் ஃபிலிம்’ என்று கூறியதோடு படத்தில் எந்த ‘கட்’டும் கொடுக்காமல் ‘மாயா’வுக்கு ‘ U/A’ சர்டிஃபிக்கெட் வழங்கியிருக்கிறார்கள்.

இப்படத்தில் நயன்தாராவுடன் ஆரி, ரேஷ்மி மேன்ன், ரோபோ சங்கர் முதலானோர் நடித்துள்ளனர். அறிமுக இசை அமைப்பாளர் ரான் யோஹான் இசை அமைத்துள்ளார். குட்டி ரேவதி, உமா தேவி பாடல்களை எழுதியுள்ளனர். சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘டால்பி அட்மாஸ்’ தொழில்நுட்பத்தில் உருவாகியிருக்கும் ‘மாயா’ படத்தை தமிழகமெங்கும் ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் விரைவில் வெளியிட இருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அவள் - காரிகள் கண்ணே பாடல் வீடியோ


;