தயாரிப்பாளராகிறார் அமலா பால்!

தயாரிப்பாளராகிறார் அமலா பால்!

செய்திகள் 16-Jul-2015 12:03 PM IST VRC கருத்துக்கள்

‘சைவம்’ மற்றும் விரைவில் வெளியாக இருக்கும் ‘நைட் ஷோ’ ஆகிய படங்களை தயாரித்த நிறுவனம் ‘Think Big Studios’. இந்நிறுவனம் சார்பில் இயக்குனர் விஜய்யின் மனைவியும், நடிகையுமான அமலா பாலும், விஜய்யின் தந்தை ஏ.எல்.அழகப்பனும் இணைந்து ஒரு படத்தை தயாரிக்கிறார்கள். இப்படத்தை இந்தியாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரும், இயக்குனர் விஜய்யின் குருநாதருமான ப்ரியதர்ஷன் இயக்குகிறார். இப்படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடந்தது. இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், ஸ்ரேயா ரெட்டி ஜோடியாக நடிக்கிறார்கள். இவர்கள் இருவரும் ஏற்கெனவே ப்ரியதர்ஷன் இயக்கத்தில் ‘காஞ்சிவரம்’ படத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தில் தேசிய அளவில் அனைவரையும் கவரக்கூடிய ஒரு கதையை படமாக்க இருக்கிறாராம் ப்ரியதர்ஷன். இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். புரொடக்‌ஷன் டிசைனராக சாபு சிரில் பணியாற்றுகிறார்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகியுள்ள அமலா பால் படம் குறித்து பேசும்போது, “நான் தயாரிக்கும் முதல் படமே சர்வதேச ரசிகர்களுக்கான படமாக தயாராகவுள்ளது. ப்ரியதர்ஷன் சார் சந்தோஷ் சிவன் சார், பிரகாஷ் ராஜ் சார், ஸ்ரேயா ரெட்டி என மிக திறமையான கலைஞர்கள் இப்படத்தில் பணியாற்றுவது மிகப் பெரிய பலம். இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் மத்தியில் தொடங்கவுள்ளோம். எங்கள் ‘ Think Big Studios’ தயாரிப்பு நிறுவனதிற்கு இப்படம் சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுத்தரும்” என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வனமகன் - டீசர்


;