சென்சாரில் பாராட்டு பெற்ற சீனுராமசாமி படம்!

சென்சாரில் பாராட்டு பெற்ற சீனுராமசாமி படம்!

செய்திகள் 16-Jul-2015 11:53 AM IST VRC கருத்துக்கள்

‘நீர்பறவை’ படத்தை தொடர்ந்து சீனுராமசாமி இயக்கியுள்ள படம் ‘இடம் பொருள் ஏவல்’. இப்படத்தில் விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ் முதலானோர் நடித்துள்ளனர். வித்தியாசமான கதைகளை இயக்கி வரும் சீனுராமசாமி இப்படத்திலும் மாறுபட்ட ஒரு கதையை கையாண்டுள்ளார் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் இப்படம் சென்சாருக்கு சென்றது. படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகளுக்கு படம் மிகவும் பிடித்து விட்டதோடு, படத்திற்கு அனைவரும் பார்க்க கூடிய ‘யு’ சர்டிஃபிக்கெட் வழங்கியிருக்கிறார்கள். லிங்குசாமியில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். ‘இடம் பொருள் ஏவல்’ ரிலீசுக்கு தயாராகி வருகிறது

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விக்ரம் வேதா - டிரைலர்


;