பாண்டிராஜ் அசிஸ்டென்ட் இயக்கும் படத்தில் ஜி.வி.!

பாண்டிராஜ் அசிஸ்டென்ட் இயக்கும் படத்தில் ஜி.வி.!

செய்திகள் 16-Jul-2015 11:20 AM IST VRC கருத்துக்கள்

‘டார்லிங்’ படத்தை தொடர்ந்து ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’, ‘பென்சில்’ முதலான படங்களில் நடித்து வரும் ஜி.வி.பிரகாஷ் அடுத்து ‘திருடன் போலீஸ்’ படத்தை தயாரித்த ‘கெனன்யா ஃபிலிம்ஸ்’ ஜெ.செல்வகுமார் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை இயக்குனர் பாண்டிராஜிடம் அசிஸ்டென்டாக பணிபுரிந்த பிரசாந்த் பாண்டிராஜ் இயக்குகிறார். இன்னும் டைட்டில் வைக்காத இப்படத்தில் ஜி.வி.யுடன் பால சரவணன், ‘முண்டாசுப்பட்டி’ ராமதாஸ் ஆகியோரும் நடிக்கிறார்கள். கதாநாயகி யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.
‘திருடன் போலீஸ்’ படத்தை தொடர்ந்து ’உள்குத்து’, ‘ஒரு நாள் கூத்து’ என்று இரண்டு படங்களை தயாரித்து வருகிறது ‘கெனன்யா ஃபிலிம்ஸ்’. இந்த படங்களை தொடர்ந்து இந்நிறுவனத்தின் நான்காவது தயாரிப்பாக ஜி.வி. நடிக்கும் படத்தை தயாரிக்கிறது. இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் கதையின் நாயகனாக நடிப்பதோடு, இசையையும் அவரே கவனிக்கிறார். ஒளிப்பதிவை சங்கர் கவனிக்க இருக்கிறார். இப்படம் ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் காமெடி படமாக உருவாக இருக்கிறதாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கடவுள் இருக்கான் குமாரு - கும் சாரே பாடல் வீடியோ


;