செப்டம்பர் 9-ல் ‘சண்டக்கோழி-2’

செப்டம்பர் 9-ல் ‘சண்டக்கோழி-2’

செய்திகள் 16-Jul-2015 10:48 AM IST VRC கருத்துக்கள்

லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்த படம் ‘சண்டக்கோழி’. 2005-ல் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் மீண்டும் இணையவிருக்கிறார்கள் லிங்குசாமியும், விஷாலும்! கடந்த சில மாதங்களாக இதன் ஸ்கிரிப்ட் வேலைகளில் பிசியாக இயங்கி வந்த லிங்கு சாமி தற்போது ஸ்கிரிப்ட் வேலைகளை முடித்து விட்டாராம். இதனால் இப்படத்தின் படப்பிடிப்பை செப்டம்பர் மாதம் 9-ஆம் தேதியிலிருந்து துவங்க திட்டமிட்டுள்ளார் லிங்குசாமி! விஷால் நடித்துள்ள ‘பாயும்புலி’ படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து ரிலீஸுக்கு தயாராகை வரும் நிலையில் ‘சண்டக்கோழி-2’வில் நடிக்க தயாராகி வருகிறார் விஷால்.

இந்த படம் தவிர பாண்டிராஜ் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்கிறார் விஷால். இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. லிங்குசாமியின் ‘சண்டக்கோழி-2’ படப்பிடிப்பு முடிந்ததும் பாண்டிராஜ் இயக்கும் படத்தில் இணையவிருக்கிறார் விஷால்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - பாடல் வீடியோ


;