‘பாயும் புலி’ ரிலீஸ் தேதி அறிவித்த விஷால்!

‘பாயும் புலி’ ரிலீஸ் தேதி அறிவித்த விஷால்!

செய்திகள் 16-Jul-2015 10:27 AM IST VRC கருத்துக்கள்

சுசீந்திரன் இயக்கத்தில் விஷால், காஜல் அகர்வால், சூரி, ஆனந்தராஜ், ஜெயபிரகாஷ், அர்.கே. மனோஜ் குமார், அப்புக்குட்டி, அருள்தாஸ் ஐஸ்வர்யா தத்தா முதலானோர் நடித்துள்ள படம் ‘பாயும்புலி’. ‘வேந்தர் மூவீஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.மதன் தயாரித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து, படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இப்படத்திற்கு டி.இமான் இசை அமைத்துள்ளார். இப்படத்திற்காக டி.இமான் இசையில் அமைந்துள்ள ‘சில்க் மரமே…’ என்று துவங்கும் சிங்கிள் டிராக் ஒன்றை நேற்று வெளியிட்டார்கள். இதனை இயக்குனர் லிங்குசாமி வெளியிட, இயக்குனர்கள் திரு, பாண்டிராஜ் பெற்றுக் கொண்டனர். இப்படத்தின் முழு பாடல்களின் வெளியீட்டு விழா அடுத்த மாதம் 2-ஆம் தேதி பிரம்மாண்டமான முறையில் நடைபெறவிருக்கிறது. அதனை தொடர்ந்து ‘பாயும் புலி’ படத்தை செப்டம்பர் மாதம் 4-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக விஷால் கூறினார். எடிட்டிங் வேலைகள் முடிந்துள்ள இப்படம் 2 மணி 10 நிமிடங்கள் ஓடக்கூடிய வகையில் அமைந்துள்ளதாம்! பாடல்களுக்கு கவிஞர் வைரமுத்து, இசைக்கு டி.இமான், ஒளிப்பதிவுக்கு வேல்ராஜ், எடிட்டிங்குக்கு ஆன்டனி, கலைக்கு ராஜீவன் என பெரும் கூட்டணி அமைந்துள்ள இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;